நடிகர் விவேக் மறைவு... திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி !

0 5315

நடிகர் விவேக் மறைவுக்கு திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

சென்னை விருகம்பாக்கத்தில் வீட்டில் வைக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் உடலுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி மற்றும் ஜோதிகா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இயக்குநர் விக்ரமனும், விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

விவேக் மறைவுக்கு, நடிகர் வடிவேல் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், விவேக் மாரடைப்பால் இறந்த செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். பொதுநலச் சிந்தனை, சமூக அக்கறை கொண்டவர் விவேக் என்று கூறியுள்ள வடிவேல், இருவரும் பழகிய தருணங்களை நினைவலைகளை நா தழுதழுக்க பகிர்ந்து கொண்டார்.

நடிகர் விவேக் மறைவுக்கு, வடிவேல் கண்ணீர் மல்க இரங்கல்

விவேக்குடன் பழகிய தருணங்களை நா தழுதழுக்க பகிர்ந்து கொண்ட வடிவேல்

பல நண்பர்களை சம்பாதித்த நல்ல உள்ளம் கொண்டவர் விவேக் என நடிகர் மயில்சாமி புகழஞ்சலி செலுத்தினார்.

நடிகராக மட்டுமில்லாமல் நல்ல மனிதராகவும் சிறந்து விளங்கியவர் விவேக் என்றும், அவரது மறைவு பேரதிர்ச்சியாக இருப்பதாகவும் நடிகர் ஆடுகளம் நரேன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜனங்களின் கலைஞன் என்றழைக்கப்படும் விவேக் உடலுக்கு நடிகர் சூரி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நாம் இழந்து வாடுவதை போல, பல லட்சம் மரங்களும் விவேக்கை இழந்து வாடுகிறது என நடிகர் நாசர் இரங்கல் தெரிவித்துள்ளார். 

சின்ன கலைவாணர் என பாசத்தோடு அழைக்கப்பட்ட நடிகர் விவேக் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய யோகிபாபு, விவேக்குடனான நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். 

மறைந்த நடிகர் விவேக் உடலுக்கு நடிகர் விக்ரம் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

நடிகர் இமான் அண்ணாச்சியும் விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

நகைச்சுவை நடிகர் கவுண்டமனியும், விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் விவேக் உடலுக்கு நேரில் வந்து பாடலாசிரியர் வைரமுத்து கவியஞ்சலி செலுத்தினார். 

நடிகர் விவேக்கின் இழப்பை ஈடு செய்யவே முடியாது என்ற நடிகர் சிங்கம் புலி, அவர் நட்ட லட்சகணக்கான மரங்களில் ஒரு மரங்கள் கூட அவருக்கு ஆக்சிசன் தரவில்லை என ஆதங்கம் அடைந்தார். 

நடிகர் பொன்வண்ணன் தனது குடும்பத்துடன் வந்து விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

நடிகர் விவேக்கின் சமூகம் சார்ந்த கருத்துக்களை பின்பற்றி நடப்பதே அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் என நடிகை இந்துஜா தெரிவித்தார். 

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் விவேக் உடலுக்கு செலுத்தினார்.

இசையமைப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என பன்முக தன்மை கொண்டவர் விவேக் என புகழாரம் சூட்டிய நகைச்சுவை நடிகர் தாமு, அவருடைய பெருமை உலகிற்கு தெரியும் முன்னரே அவர் மறைந்துவிட்டதாக கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

சினிமாவை தாண்டி சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட விவேக்கின் இழப்பு மிகப்பெரிய இழப்பு என அவருக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

விருகம்பாக்கத்திலுள்ள் வீட்டில் வைக்கப்பட்டுள்ள விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நகைச்சுவை நடிகர் சார்லி, அடுத்தவர்களின் குரலாகவே வாழ்ந்தவர் விவேக் எனத் தெரிவித்தார். 

நடிகர் கஞ்சா கருப்பு, விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

நடிகர் கணேஷ் மற்றும் நடிகை ஆர்த்தி ஆகியோர் விவேக் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.  

பாடகர் அந்தோனி தாஸ் விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தனிமனித ஒழுக்கத்தை பின்பற்ற நடிகர் விவேக் ஒருபோதும் தவறியதில்லை என அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் நட்ராஜ் தெரிவித்தார்.

நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவு, கலை உலகிற்கு மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் தனக்கு பேரிழப்பு என நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். 

நகைச்சுவை நடிகர் விவேக்கின் உடலுக்கு, நடிகர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் வையாபுரி, பல கடினமான தருணங்களில் தனக்கு உதவியாக இருந்தவர் விவேக் என நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 

நடிகைகள் த்ரிஷா, ஆத்மிகா ஆகியோரும் விவேக் உடலுக்கு நேரில் வந்து மரியாதை செலுத்தினர். 

இயக்குநர்கள் ஷங்கர், லிங்குசாமி, சுசீந்திரன், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோரும் விவேக் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொண்டனர்.

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், குடும்பத்தினருடன் வந்து விவேக் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

நகைச்சுவை நடிகர் கிளி ராமச்சந்திரன் விவேக் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். 

விவேக் உடலுக்கு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

நடிகர்கள் அர்ஜூன், அருண்விஜய், ஹரிஷ் கல்யாண் ஆகியோரும் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

நடிகர் தம்பி ராமையா விவேக் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் 

கவிஞர் சினேகனும் விவேக் உடலுக்கு மரியாதை செலுத்தினார். 

சமூக மாற்றத்துக்காவும் முன்னேற்றத்துக்காகவும் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டவர் நடிகர் விவேக் என நடிகர் ஆரி புகழாரம் சூட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் ஆடியோவில், நடிகர் விவேக்கின் இழப்பை நம்பவோ, மனது ஏற்கவோ முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

நேர்மறை எண்ணங்கள் மட்டுமே கொண்டவர் நடிகர் விவேக் என்றும் யாரைப்பற்றியும் அவர் தவறாகப் பேச மாட்டார் என்றும் நடிகர் கார்த்திக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் விவேக்கின் மரணத்தை மனம் ஏற்றுக்கொள்ள மறுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments