கொரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மையுடையது - லான்செட் மருத்துவ இதழ் புதிய ஆய்வு
கொரோனா வைரஸ் காற்றில் பரவும் தன்மையுடையது என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உறுதியான சான்றுகள் கிடைத்திருப்பதாக லான்செட் மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் காற்றில் பரவுவதால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இதனை கருத்தில் கொண்டு புதிய முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் ஓர் அறைக்குள் இருக்கும் போது அதிகம் பரவுவதில்லை என்றும் பொதுவெளியில்தான் காற்றில் அதிகமாக வைரஸ் பரவுகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments