டெல்லியில் வார இறுதிக்கான ஊரடங்கு நேற்றிரவு முதல் அமலுக்கு வந்தது
டெல்லியில் இரவு நேர ஊரடங்கை தொடர்ந்து, வார இறுதி நாட்களில் நேற்றிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதையடுத்து போலீசார் தடுப்புகளை அமைத்து வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
அத்தியாவசியப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இபாஸை வார இறுதி ஊரடங்கிலும் பயன்படுத்தலாம் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. திங்கட்கிழமை காலை வரை அனைத்துக் கடைகள், வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள், சந்தைகள் மூடப்பட்டிருக்கும்.
இதனிடையே டெல்லி எல்லையருகே நான்கு மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கொரோனா பாதிப்பு அதிகரித்த போதிலும் கலைந்து செல்லாமல் போராட்டத்தைத் தொடர உள்ளதாக அறிவித்துள்ளனர்
Comments