"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
திருப்பத்தூர் மாவட்டத்தின் பல இடங்களில் அண்மை நாட்களில் 2ஆவது முறையாக நில அதிர்வு - மக்கள் பீதி
திருப்பத்தூர் மாவட்டத்தில், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, கொரட்டி, கந்திலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறியுள்ளனர்.
இதேபோன்று கடந்த 11ஆம் தேதி இரவு, திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவும் மீண்டும் நில அதிர்வை உணர்ந்ததாக, திருப்பத்தூர் மாவட்ட மக்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்த கேள்விக்கு விளக்கம் அளித்துள்ள திருப்பத்தூர் ஆட்சியர் சிவன்அருள், கடந்த முறை உணரப்பட்ட நில அதிர்வின் மையம், திருவண்ணமாலை மாவட்டம் செங்கத்தை மையமாக கொண்டு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நில அதிர்வு குறித்து டெல்லியில் உள்ள நிலநடுக்க ஆய்வு மையத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக ஆட்சியர் சிவன்அருள் கூறியுள்ளார்.
Comments