சென்னை வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியின் 92ஆவது சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு

0 4698
சென்னை வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியின் 92ஆவது சாவடியில் சனிக்கிழமை அன்று மறுவாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியின் 92ஆவது சாவடியில் சனிக்கிழமை அன்று மறுவாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

டிஏவி பள்ளியில் உள்ள 92ஆவது சாவடியில் பயன்படுத்திய வாக்கு எந்திரத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டுசென்றது சர்ச்சையானதால் அங்கு மறு வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு அலுவலர்கள் இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளனர்.

இந்தச் சாவடிக்குட்பட்ட பகுதியில் 548 ஆண் வாக்காளர்கள் உள்ள நிலையில், ஏப்ரல் 6 அன்று 220 பேர் மட்டுமே வாக்களித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments