கொரோனா தடுப்பு பணிக்கு தேர்தல் நன்னடத்தை விதிகள் தடையாக உள்ளன - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 4190
கொரோனா தடுப்பு பணிக்கு தேர்தல் நடத்தை விதிகள் முட்டுக்கட்டையாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு பணிக்கு தேர்தல் நடத்தை விதிகள் முட்டுக்கட்டையாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரசின் தாக்கம் தீவிரமாகி வரும், சூழ்நிலையில் சுகாதாரத்துறைக்கு தேவையான ஆலோசனை, அறிவுரைகளை அமைச்சர் அருகில் இருந்து வழங்கும் போது பணிகள் இன்னும் வேகமாக நடைபெறும் என்றார்.

ஆனால் தேர்தல் ஆணையம் கொரோனா தொடர்பாக அமைச்சர் கூட்டம் மட்டும் நடத்தலாம் என்று நிபந்தனை விதித்துள்ளதாக அவர் கூறினார். களத்தில் இறங்கி பணி செய்ய வேண்டிய இந்த நேரத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் முட்டுக்கட்டையாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் வலுவான சுகாதார கட்டமைப்பை உருவாக்கி உள்ளதாகவும், அதனை முழுமையாக பயன்படுத்தினால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments