உரம், பூச்சிக்கொல்லி மருந்துக்கு குட்-பை சொல்லும் மலேசிய விவசாயிகள்
மலேசியாவில் முலாம்பழங்களை பயிர் செய்யும் விவசாயிகள், அவை செழிப்பாக வளர்வதற்கு புது யுத்தியை கையாளுகின்றனர்.
புட்ரஜாயா (PUTRAJAYA ) நகரிலுள்ள பசுமை பண்ணைகளில் ஜப்பானிய மஸ்க்மெலன் எனப்படும் முலாம்பழங்கள் வளர்க்கப்படுகின்றன. அவை செழிப்பாக வளர, முலாம்பழங்களுக்கு மசாஜ் செய்வதுடன், பழங்களுக்கு மத்தியில் இசையை ஒலிக்கவைக்கின்றனர்.
இவ்வாறு எவ்வித உரமும், பூச்சிக்கொல்லி மருந்தும் இல்லாமல் வளரும் இந்த முலாம் பழங்களை பண்ணைக்கு வந்து வாங்குவதுடன் ஆன்லைனிலும் வாங்க ஆர்வம் காட்டுவதாக இளம் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Comments