தலைவி படத்துக்குத் தடை இல்லை.. உயர்நீதிமன்றம்
ஜெயலலிதாவின் வாழ்வை கதையாகக் கொண்ட தலைவி படத்துக்குத் தடை விதிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தலைவி படத்தில் தங்கள் குடும்பத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை நீதிபதிகள் சுப்பையா, சத்திகுமார் அமர்வு விசாரித்தது. 'தலைவி' என்ற புத்தகத்தின் அடிப்படையிலேயே படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தீபாவிடம் ஒப்புதல் பெறத் தேவையில்லை என்றும் இயக்குநர் விஜய் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
படத்தில் ஜெயலிதாவை நல்ல முறையிலேயே சித்தரித்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டது. அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில், தலைவி படத்திற்கு மட்டும் இன்றி குயின் வெப் சீரிசுக்கும் தடை விதிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், தீபாவின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
Comments