குழந்தைகளை குறி வைக்கும் கொரோனா..! அலட்சியம் வேண்டாமென எச்சரிக்கும் மருத்துவர்கள்

0 14243

தற்பொழுது பரவி வரும் கொரோனா வைரஸால் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வேகமாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறும் மருத்துவர்கள், நோய்த்தொற்று குறித்து அலட்சியம் காட்ட வேண்டாமென எச்சரித்துள்ளனர்.

2019ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா தொற்றின் தாக்கம் 2020ம் ஆண்டின் இடையில் தீவிரமடைந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. பின்னர் 2020ம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகள் தயாரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. கொரோனா தடுப்பு மருந்து செயல்பாட்டிற்கு வந்த நிலையில் மக்களிடையே அச்சம் நீங்க இயல்பு நிலை திரும்பியது.

இந்த நிலையில் 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் வைரஸ் தொற்று வேகமெடுக்க தொடங்கியது. 2020க் ஆண்டில் நாள் ஒன்றின் வைரஸ் பாதிப்பு அதிகபட்சமாக ஒரு லட்சத்தை தாண்டாத நிலையில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதுவரை இல்லாத வகையில் ஒரு நாள் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது.

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். கொரோனாவின் இரண்டாவது அலை என்பதால் கட்டுப்பாடுகளை மீண்டும் தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியது. தற்பொழுது பரவி வரும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளை வெளிப்படுத்திய மருத்துவர்கள் அனைவரும் வைரஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுமென கூறியுள்ளனர்.

இந்த நிலையில் வேகமாக பரவி வரும் வைரஸ் தொற்றிற்கு இளைஞர்களும் ஒன்றிலிருந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளும் வேகமாக பாதிக்கப்பட்டு வருவதாக டெல்லி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வைரஸ் பரவல் வேகமெடுத்த நேரத்தில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தை உட்பட 8 குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தலைநகர் டெல்லியில் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதத்தினர் 15 லிருந்து 30 வயதானவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே, குழந்தைகள் மீது அதீத அக்கறை கொண்டு பெற்றோர் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும், அவசியமில்லாமல் குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டுமெனவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும், அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், அடிக்கடி கைகளை கிருமி நாசினியை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், வைரஸ் அறிகுறியோ அல்லது காய்சாலோ இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments