கறுஞ்சிறுத்தையை செல்லப்பிராணியாக வளர்க்கும் தம்பதி..
நாய், பூனை, கிளி போன்றவற்றை செல்லப்பிராணியாக வளர்ப்பதுண்டு, ஆனால் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டர் மற்றும் மரியா டிமிட்ரிவ் தம்பதியினர் கறுஞ்சிறுத்தையை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர்.
அர்ஜெண்டினாவின் பிரபல கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்ஸியின் நினைவாக அந்த கறுஞ்சிறுத்தைக்கு மெஸ்ஸி என பெயரிடப்பட்டிருப்பதாகவும், கடந்த 5 ஆண்டுகளாக தங்கள் வீட்டில் ஒரு நபராக மெஸ்ஸி இருப்பதாகவும் அலெக்ஸாண்டர் தெரிவிக்கிறார்.
பென்சா நகரில் உள்ள செல்லப்பிராணி பூங்காவிலிருந்து வாங்கியதாக தெரிவித்த அலெக்ஸாண்டருடன், மெஸ்ஸி குழந்தையை போல் கொஞ்சி விளையாடுகிறது.
Comments