அமெரிக்காவில் உள்ள லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழப்பு

0 2670

அமெரிக்காவில் உள்ள லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.

இண்டியானாபொலிஸ் ( Indianapolis ) நகரிலுள்ள பெட்எக்ஸ்(Fedex ) நிறுவனத்திற்கு புகுந்த மர்ம நபர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டார்.

இதில் 8 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments