ஊரக, தொலைதூரப் பகுதிகளுக்கு, சேட்டிலைட் மூலம் அதிவேக இண்டர்நெட் வழங்கும் ஸ்டார்லிங்க் சேவைக்கு அமெரிக்காவில் வரவேற்பு

0 3274
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் சேவைக்கு அமெரிக்காவில் வரவேற்பு

ஊரக மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு, செயற்கைக்கோள் மூலம் அதிவேக இண்டர்நெட் இணைப்பு வழங்கும் ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்லிங்க் சேவைக்கு அமெரிக்க பயனாளர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

ஸ்டார்லிங்க் சேவைக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஏற்கெனவே 60 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது.

ஆன்டெனா, வைஃபை ரூட்டர், பவர் சப்ளை, டிரைபாட் மவுன்ட் உள்ளிட்ட கருவிகளுக்கு குறைந்த பட்சம் 499 டாலர், மாதந்தோறும் 99 டாலர்கள் என்ற கட்டணத்தில் சேவை வழங்கப்படுகிறது.

செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது 300 Mbps வேகம் கிடைக்கும் என எலான் மஸ்க் கூறியிருந்த நிலையில், தற்போது 150 Mbps டவுன்லோட் ஸ்பீட் இருப்பதாக பயனாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கூரை அல்லது உயரமான பகுதிகளில் ஆன்டெனாவை பொருத்தி, இணைப்பு கொடுப்பது என்பதைத் தவிர்த்து, சேவையின் தரம், வேகம் மற்றும் கட்டணம் குறித்து பயனாளர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments