தமிழகத்தின் சில மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கோவில்பட்டியில் 9 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடலில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments