சிகிச்சை அளிக்கமுடியாமல் திணறும் தலைநகர்: ஒரு படுக்கையை இரு கொரோனா நோயாளிகள் பகிர்ந்துகொள்ளும் அவலநிலை
டெல்லி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் ஒரு படுக்கையை இருவர் பகிர்ந்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புகளால் மருத்துவமனைகள் நிரம்பிவழிகின்றன.1,500 படுக்கைகள் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் ஒன்றான, லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயணன் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகள் ஒரே படுக்கையில் சிகிச்சை பெறுகின்றனர் பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்கவேண்டியிருப்பதால் வேறு வழியின்றி இவ்வாறு சிகிச்சை அளிப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையும் நிலவுவதால், கொரோனா நோயாளிகள் ஆட்டோவிலும், பேருந்திலும் பயணித்து மருத்துவமனைக்கு வருகின்றனர்.
Comments