2021ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ!

0 6500

2021 ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் விராட் கோலி உள்ளிட்ட 3 பேர் ஏ பிளஸ் கிரேடில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, ஆண்டுதோறும், வீரர்களின் ஒப்பந்த பட்டியலை வெளியிடுவது வழக்கம், அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஒப்பந்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் விராட் கோலி, ரோகித் ஷர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூன்று பேரும் ஏ பிளஸ் கிரேடு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களின் சம்பளத் தொகை ஆண்டுக்கு 7 கோடி ரூபாயாகும். அதேபோல் ரவிசந்திரன் அஸ்வீன், ரவீந்திர ஜடேஜா, புஜாரா, ரஹானே ஆகியோர் கிரேடு ஏயின் கீழ் இடம் பெற்று 5 கோடியை சம்பளமாக பெறுகின்றனர். மனிஷ் பாண்டே, கேதர் ஜாதவ் ஆகியோர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், கிரேடு சி- யில் சுப்மன் கில், அக்ஸர் பட்டேல், முகமது சிராஜ் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் ஊதியமாகும்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments