கும்பமேளாவுக்குச் சென்று திரும்புவோருக்கு கொரோனா சோதனை கட்டாயம் - கர்நாடக அரசு
அரித்துவார் கும்பமேளாவுக்குச் சென்று திரும்புவோர் கொரோனா சோதனை செய்து கொள்வது கட்டாயம் எனக் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
உத்தரக்கண்ட் மாநிலம் அரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாவில் கங்கையாற்றில் லட்சக்கணக்கானோர் புனித நீராடினர். இதில் பங்கேற்ற துறவியரும், மடத் தலைவர்களும், பொதுமக்களும் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாததால் அங்குச் சென்று வந்தோருக்குக் கொரோனா தொற்று பரவியிருக்கும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கும்பமேளாவுக்குச் சென்று வருவோர் ஒரு வாரம் வீட்டுத் தனிமையில் இருக்க வேண்டும் என்றும், ஆர்டி பிசிஆர் சோதனை செய்து கொரோனா தொற்றில்லை எனத் தெரிந்த பின்னரே வழக்கமான செயல்பாட்டில் ஈடுபடலாம் என்றும் கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
Comments