இந்தியாவில் மின்சாரக் கார் உற்பத்தியைத் தொடங்க டெஸ்லாவுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்
இந்தியாவில் கூடிய விரைவில் மின்சாரக் கார் உற்பத்தியைத் தொடங்கும்படி அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.
ரெய்சினா டயலாக் என்கிற கருத்தரங்கில் பேசிய நிதின் கட்கரி, இந்தியாவில் மின்சாரக் கார் உற்பத்தியைத் தொடங்கப் பொன்னான வாய்ப்புள்ளதாகவும், அதற்குத் தேவையான உதிரிப் பாகங்களை இந்திய நிறுவனங்கள் தயாரித்து வருவதாகவும் டெஸ்லா நிறுவனத்திடம் தான் பேசியதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் கூடிய விரைவில் உற்பத்தியைத் தொடங்க வேண்டும் என டெஸ்லாவிடம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
டெஸ்லா நிறுவனம் பெங்களூரில் பதிவு அலுவலகத்தைத் தொடங்கியுள்ளதும், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் தனது கார் விற்பனையைத் தொடங்க உள்ளதும் குறிப்பிடத் தக்கது.
Comments