கோவாக்சின் தடுப்பு மருந்தைத் தயாரிக்க மும்பையில் உள்ள ஹாப்கின் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி
மும்பையில் உள்ள ஹாப்கின் இன்ஸ்டிடியூட்டில் கோவாக்சின் தடுப்பு மருந்தைத் தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிரத்தில் தடுப்பு மருந்து தட்டுப்பாடு என மாநில அரசு தெரிவித்தது. இதையடுத்து மும்பையில் உள்ள ஹாப்கின் இன்ஸ்டிடியூட்டில் கோவாக்சின் தடுப்பு மருந்தைத் தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என மகாராஷ்டிர அரசு கோரிக்கை விடுத்தது.
இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, கோவாக்சின் தடுப்பு மருந்தைத் தயாரிக்க ஹாப்கின் நிறுவனத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்காகப் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பெருமளவில் கோவாக்சின் உற்பத்தியைத் தொடங்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Comments