ஆந்திராவில் சாலையோரம் பையில் துண்டாக கிடந்த பாதி மனித உடல்.... போலீசார் தீவிர விசாரணை

0 2602

ஆந்திராவில் சாலையோரம் டிராவல் பேக்கில் இருந்த பாதி மனித உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குப்பம் அடுத்த நெருமனூர் சாலையில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு பை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை செய்ததில் இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட மனித உடலின் ஒரு பாதி பையில் இருந்தது தெரிய வந்தது.

இறந்தது யார் என்றும், எஞ்சிய உடல் பாகத்தையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் பிற மாநிலங்களில் கொலை செய்யப்பட்டு உடல் அங்கு வீசப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments