ராமர் கோவில் கட்டுவதற்காக வசூலிக்கப்பட்ட 15 ஆயிரம் காசோலைகள் பல்வேறு காரணங்களால் திரும்பின
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, விஸ்வ ஹிந்து பரிஷ் வசூலித்த, 22 கோடி ரூபாய் மதிப்பிலான, 15 ஆயிரம் காசோலைகள் பல்வேறு காரணங்களால் திரும்பிவிட்டன.
அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கு நாடு முழுவதும் இதுவரை, 5ஆயிரம் கோடி ரூபாய் வசூலானதாக கூறப்படுகிறது. இறுதி தொகை, அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், வங்கி காசோலைகளாக வசூலிக்கப்பட்ட, 15 ஆயிரம் காசோலைகள், கணக்கில் பணம் இல்லாதது உட்பட, பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக திரும்ப வந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், 2ஆயிரம் காசோலைகள் அயோத்தியில் பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments