வேகமாகப் பரவும் கொரோனா: வரலாற்றுச் சின்னங்களை மூட தொல்லியல் துறை முடிவு
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள வரலாற்றுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், போன்றவற்றை மே 15ம் தேதி வரை மூடும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து தாஜ்மகால், மாமல்லபுரம், போன்ற பிரசித்தி பெற்ற வரலாற்றுச்சின்னங்கள் மூடப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று இரண்டாவது அலை நாட்டின் பல மாநிலங்களில் வேகம் எடுத்துவரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரகலாத் சிங் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
Comments