தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்

0 8127

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கேரளா முதல் உள் கர்நாடகம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நீலகிரி, கோவை, சேலம் மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மிதமான மழையும், 18,19 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும் பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments