டுவிட் உதய நிதி... டுவிஸ்ட் வைத்த கர்ணன் டீம்…! கருத்தில் மாறாத செல்வராஜ்

0 27047
டுவிட் உதய நிதி... டுவிஸ்ட் வைத்த கர்ணன் டீம்…! கருத்தில் மாறாத செல்வராஜ்

கர்ணன் படத்தில் வரும் கலவரம் 1995 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்தது என்பதால், 1997 ஆம் ஆண்டுக்கு முற்பகுதி என்பதை மாற்றக்கூறி இயக்குனரிடம் உதயநிதிஸ்டாலின் வேண்டுகோள் விடுத்த நிலையில் 1990 களின் பிற்பகுதி என இயக்குனர் மாரி செல்வராஜ் மாற்றியிருந்தார். இதுவும் திமுக ஆட்சியை களங்கப்படுத்தும் முயற்சி என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

கர்ணன் திரையரங்கை கலக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில் அந்த படத்தில் இடம் பெற்ற வன்முறை காட்சிகள் எந்த கட்சியின் ஆட்சியில் நடந்தவை என்ற வாதமும், வாக்குவாதமும் சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டுள்ளது.

கொடியன் குளம் கலவரத்தின் சாயலில் எடுக்கப்பட்டபடம் என்று விமர்சிக்கப்பட்டதால், 1995 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்த கலவரத்தை 1997 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நடந்தது போல திரித்துக் கூறப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினர் டுவிட்டரில் இயக்குனர் மாரி செல்வராஜை திட்டி தீர்த்தனர்.

திமுகவினரை சமாதானப்படுத்தும் முயற்சியாக கர்ணன் படத்தை பார்த்து பாராட்டிய உதய நிதி ஸ்டாலின், படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் 1997 ஆம் ஆண்டுக்கு முற்பகுதி என்பதை மட்டும் மாற்றி தவறை திருத்திக் கொள்ளுமாறு இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தயாரிப்பாளர் தாணு ஆகியோரிடம் கூறியிருந்தார்.

அவர்களும் தவறை 2 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தனர், அதன் படி 1997 பிற்பகுதி என்பதை மாற்றி 1990 களின் பிற்பகுதி என்று படத்தில் போடப்பட்டது. 1990ல் ஆட்சியில் இருந்ததும் திமுக என்பதால் , மாரி செல்வராஜ் திட்டமிட்டே கருத்து திரிப்பில் ஈடுபடுவதாக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் மாரி செல்வராஜ், தனது முந்தைய படமான பரியேரும் பெருமாளில் ஒரு காட்சியில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் 17 பேர் தாமிரபரணியில் கொல்லப்பட்டதை நினைவூட்டும் விதமாக ஒரு போஸ்டர் ஒன்றை திரையில் காட்டி இருந்தார்.

எனவே திட்டமிட்டே திமுக ஆட்சிக்கு எதிரான கருத்தில் இருந்து மாறாமல் இயக்குனர் மாரி செல்வராஜ் உறுதியாக இருப்பதால், ஆண்டை மாற்றுவது போல மீண்டும் 1990 என்று குறிப்பிட்டு திமுக ஆட்சியில் நடந்தது போலவே பார்வையாளர்களிடம் கொண்டு செல்லப்படுவதாக கூறி சமூக வலைதள திமுகவினர் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்

இதையடுத்து டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், கர்ணன் தவிர்க்க முடியாத படம் என்றும் படைப்பிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டுகையில் திருத்திக் கொள்வது வரவேற்கதக்கது, கொடியன் குளம் கலவரம் 1995 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்தது என்பதை அனைவரும் அறிவர், எனினும் 1990 களின் பிற்பகுதியில் என்று திருத்தப்பட்டிருப்பதை முன்வைத்தும் கண்டனக்குரல்கள் வருகின்றது என்று தெரிவித்துள்ள உதய நிதி ஸ்டாலின்

ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அளியாதவை அதனை யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது எனவே இந்த விஷயத்தை இத்தாடு முடித்து விட்டு ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம் என்றும் கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் தனது அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், கர்ணன் சம்பவ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதற்க்கிடையே கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் தாணுவோ படத்தில் வருவது கற்பனை என்றும் கதாசிரியரின் கற்பனையே தவிர வேறு எதுவும் இல்லை
என்று கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments