கொரோனாவை தடுக்க வேப்பிலையை கையில் எடுத்த தகவல் ஆணையர்..! எவர் கிரீன் கிருமிநாசினி

0 15203
கொரோனாவை தடுக்க வேப்பிலையை கையில் எடுத்த தகவல் ஆணையர்..! எவர் கிரீன் கிருமிநாசினி

கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அபராதத்திற்கு பயந்து  நம்மவர்கள் வித விதமான முககவசங்களை அணிந்து வருகின்றனர், மாநில தகவல் ஆணையரோ வேப்பிலை முககவசத்துடன் வலம் வருகிறார். மாஸ்காட்டும் மக்களின் கிருமி நாசினி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

தமிழகத்தில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு அதனை மீறுவோரிடம், காவல்துறையினர், உள்ளாட்சி மற்றும் வருவாய்துறையினர் தீவிர வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களிடம் முககவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அபராதத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள நம்மவர்கள் செய்யும் முன்னேற்பாடுகள் கலகலப்பை ஏற்படுத்துகின்றது.

பேருந்து நிலையத்தில் அதிகாரிகள் வருகையை அறிந்து கைப்பையை முககவசமாக மாற்றிய இவர்கள் அலர்ட் அய்யாசாமிகள் என்றால், குட்டிச்சாக்கையே மாஸ்க்காக முகத்தில் மாட்டி மாஸ் காட்டுகிறார் இந்த பெரியவர்..!

இன்னும் சிலர் பேப்பர் கப்புகளையும் சில்வர் கிண்ணங்களையும் மாஸ்க்காக அணிய, சிலர் வேப்பிலை முககவசத்துடன் வலம் வருகின்றனர். அவசரத்திற்கு இலையை முககவசமாக மாட்டி தப்பிக்க முயல்பவர்களையும் காணமுடிகின்றது.

இந்த நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட அளவிலான பொது தகவல் அலுவலர்கள் உடனான கலந்தாய்வு கூட்டத்திற்கு வந்த மாநில தகவல் ஆணையரான ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜகோபால், கையில் வேப்பிலையை வைத்துக் கொண்டு அதனை நுகர்ந்து பார்த்தவாறே வலம் வந்தார்

அவரது காரிலும் ஓட்டுனருக்கு அருகிலும், அவரது இருக்கையின் அருகிலும் வேப்பிலை கொத்து வைக்கப்பட்டிருந்தது. அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற கூட்டங்களிலும் அவரது அறிவுறுத்தலின் பேரில் வேப்பிலையை தோரணமாக கட்டி வாசலில் தொங்க விடப்பட்டிருந்தது.

மீட்டிங்கில் பேசிக் கொண்டிருந்த போது கூட ராஜகோபால், தனது அருகிலேயே வேப்பிலையை உடன் வைத்திருந்தார். அபராதத்தில் இருந்து தப்பிக்க ஏதோ ஒரு முககவசம் அணிந்தாலும், அம்மை நோயை போல கொரோனா உள்ளிட்ட எந்த நோயிக்கும் எவர் கிரீன் கிருமி நாசினியாக மருத்துவ குணமிக்க வேப்பிலை மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments