குஜராத்தில் இருந்து போதைப் பொருள் கடத்த முயன்ற பாகிஸ்தானியர்கள் 8 பேர் கைது

0 2321

குஜராத் கடல் பகுதியில் படகில் இருந்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பாகிஸ்தானியர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் இணைந்து, சர்வதேச எல்லை அருகே அரபிக் கடலில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த படகை சுற்றி வளைத்தனர். அந்த படகில் இருந்த பாகிஸ்தானியர்கள் 8 பேரை கைது செய்து, 30 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு 300 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments