வெளிநாட்டு கோவிட்-19 தடுப்பூசிகளுக்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது
வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகளுக்கான ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளுக்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்பங்களை மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும். வெளிநாட்டு தயாரிப்பாளர்கள் தங்களது விண்ணப்பங்களை இந்தியாவில் உள்ள துணை நிறுவனங்கள் அல்லது தங்களின் அங்கீகாரம் பெற்ற முகவர் முலம் விண்ணப்பிக்கலாம்.
அதன் மீது 3 வேலை நாட்களில் முடிவெடுத்து அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை, பல்வேறு நிபந்தனைகளுடன் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments