பஞ்சாப், அரியானாவிலும் 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து: 12ஆம் வகுப்புத் தேர்வு தள்ளி வைப்பு..!
பஞ்சாப், அரியானா மாநில அரசுகள் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்துள்ளதுடன், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வைத் தள்ளி வைத்துள்ளன.
பஞ்சாபில் 5, 8, 10 ஆகிய வகுப்புகளின் மாணவர்கள் தேர்வின்றி அடுத்த வகுப்புக்குச் செல்வதாக முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். 12ஆம் வகுப்புத் தேர்வைத் தள்ளி வைப்பதுடன், அதை நடத்துவதா வேண்டாமா எனப் பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதேபோல் பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்வதாகவும், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வைத் தள்ளி வைப்பதாகவும் அரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீட்டின்படி மதிப்பெண் வழங்கப்படும் என அரியானா கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் குச்சார் அறிவித்துள்ளார்.
Comments