ம. பி.யில் ஆக்சிஜன் செலுத்தும் அமைப்பை அகற்றியதால் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு
மத்தியப் பிரதேசம் சிவபுரியில் கொரோனா நோயாளிக்கு ஆக்சிஜன் செலுத்துவதை நிறுத்தியதால் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சுரேந்திர சர்மா என்னும் முதியவர் கொரோனா தொற்றுக் காரணமாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குக் குழாய் வழியாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி வந்த அமைப்பை மற்றொரு நோயாளிக்காகக் கவனிப்பாளர் எடுத்துச் சென்றார்.
இதையடுத்து மூச்சுத் திணறி சுரேந்திர சர்மா உயிரிழந்ததாக அவரின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். கண்காணிப்புக் கேமரா பதிவை ஆய்வு செய்து இது குறித்து விசாரிக்க மருத்துவமனைக் கண்காணிப்பாளர் தலைமையில் மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
Comments