செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால் இடிக்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி
செம்மஞ்சேரி காவல் நிலையம் நீர்நிலையில் கட்டப்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டால், அதனை இடிக்க உத்தரவிட நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த காவல்நிலையம், தாமரைக்கேனி என்ற நீர்நிலையில் கட்டப்பட்டிருப்பதாகவும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் ஒப்புதல் பெறாமல் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு, அங்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில் காவல்நிலையம் செயல்பட தடை விதித்து உத்தரவிட்டனர்.
Comments