கூடுதல் கொரோனா தடுப்பூசி தேவை - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

0 3272

மிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை வேகமாக பரவி வரும் சூழலில், கூடுதலாக கொரோனா தடுப்பூசி வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்திற்கு இதுவரை, 34லட்சத்து5800 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 5லட்சத்து67520 கோவாக்சின் தடுப்பூசிகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தடுப்பூசி திட்டத்தை மேலும் விரிவுபடுத்த முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைக்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கூடுதலாக 15 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளும் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments