கொரோனா தடுப்பூசி உட்பட அனைத்து வகை மருந்துகளும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன -சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் தகவல்

0 3873
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கையை மீறிச் செல்லவில்லை..! -சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன்

மிழ்நாட்டில், கொரோனா 2ஆவது அலை கைமீறிச் சென்றுவிட்டதாக அரசின் தலைமை வழக்கறிஞர் கூறிய நிலையில், அவ்வாறு எதுவும் இல்லை என, சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி உட்பட அனைத்து வகை மருந்துகளும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளதாக கூறினார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வருவோரின் தகவல்களை சேகரிக்க உதவும் படிவம், இனி தமிழிலும் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான கொரோனா தடுப்பு மருந்துகள் உள்ளிட்டவை கையிருப்பில் உள்ளதாக இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments