வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 3989

ளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதிவரை 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 8 மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.

நாளையும் நீலகிரி, கோவை, சேலம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் 2 நாட்களுக்கு நகரில் சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 11 செ.மீ.மழையும், கொடுமுடியில் 10 செ.மீ.மழையும் பதிவாகியுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments