கருந்துளையின் மல்டி பேண்ட் புகைப்படங்களை வெளியிட்டது சீனா

0 5774

வானியல் அதிசயங்களில் ஒன்றான கருந்துளையை படம்பிடிப்பதே ஆச்சர்யம் அதிலும் கருந்துளையின் மல்டி பேண்ட் புகைப்படங்களை வெளியிட்டு சீன விஞ்ஞானிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

கருந்துளையின் புகைப்படத்தில் கருப்பு நிற மையப்பகுதி, ஆரஞ்சு நிற வளையம் மற்றும் மஞ்சள் நிற வெப்பமான வாயு ஆகியவை இடம்பெற்றுள்ளன.  இந்த கருந்துளையை சீனாவின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியான தியான்மா (Tianma radio telescope)படம்பிடித்துள்ளது.

இது பூமியிலிருந்து 55 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவிலும், சூரியனை விட 6.5 பில்லியன் மடங்கு பெரிதாகவும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments