இந்தியன் - 2 படத்தை முடிக்காமல் ஷங்கர் பிற படங்களை இயக்கக் கூடாது என தடை விதிக்க லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்யலாம் - உயர் நீதிமன்றம்
இந்தியன் - 2 படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் இயக்குநர் ஷங்கர் பிற படங்களை இயக்கக்கூடாது என தடை விதிக்க மேல்முறையீடு செய்யலாம் என லைகா நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந்தியன் - 2 படத்திற்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட் என கணக்கீடப்பட்ட நிலையில், இதுவரை 236 கோடி ரூபாய் வரை செலவு செய்ள்ளதாகவும், ஆனாலும் 80% பணிகள் மட்டுமே முடிந்திருப்பதாகவும் கூறி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, பிற படங்களை இயக்க கூடாது என ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்ததோடு மனு குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல் முறையீடு செய்ய லைகா நிறுவனத்திற்கு அனுமதியளித்து உத்தரவிட்டனர்.
Comments