வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடப்பதை ஒட்டி, அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்

0 4948

சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 92-வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், அங்கு போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

வருகிற 17-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடக்கும் நிலையில், விதியை மீறி வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்ட இருசக்கர வாகனத்தில் உதயசூரியன் சின்னமும், திமுகவின் கட்சிக் கொடியும் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாக கூறி அதிமுக வேட்பாளர் அசோக் பிரச்சாரம் செய்தார்.

இதற்கு பதிலளித்துள்ள திமுக எம்.எல்.ஏ.மா.சுப்பிரமணியம்,பைக்கில் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதனால் அவர் திமுகவை சேர்ந்தவர் என எடுத்துக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments