தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ஒத்திவைக்கப்படுமா? இன்று முக்கிய ஆலோசனை
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில், தமிழகத்தில் பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கலாமா என தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பரவல் காரணமாக, சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதோடு, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்திலும் பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்கலாமா என்பது குறித்து இன்று ஆலோசனை நடைபெறுகிறது.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை நடத்துகிறார். மே மாதம் பிளஸ் 2 தேர்வு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments