கும்பமேளாவுக்காக ஹரித்துவாரில் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்: கொரோனா பரவும் ஆபத்து
கங்கை ஆற்றங்கரைகளில் நடைபெறும் கும்பமேளாவில் இதுவரை 14 லட்சம் பேர் புனித நீராடியுள்ளனர்.
இதில் 2 ஆயிரத்து100 பேருக்கும் மேல் கொரோனா தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கும்பமேளாவை முன்னதாக நிறைவு செய்யும்படி கோரிக்கை எழுந்துள்ள போதும் திட்டமிட்டபடி கும்பமேளா நடைபெறும் என்று உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.
கங்கையில் புனித நீராடுவதால் கொரோனா பரவாது என்று உத்தரகாண்ட் அரசு அதற்கு விளக்கம் அளித்துள்ளது. கங்கையில் நீராடுவது பாவங்களைத் தீர்க்கும் என்றும், மரணம் அடைந்தவர்களுக்கு முக்தி அளிக்கும் என்றும் கொரோனா போன்ற பேரிடர்கள் நீங்க வேண்டும் என்று வேண்டுவதாகவும் அங்குள்ள ஆன்மீகத் தலைவர்கள் கூறுகின்றனர்.
Comments