அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை பயன்படுத்த போவதில்லை என டென்மார்க் அறிவிப்பு
அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை பயன்படுத்த போவதில்லை என டென்மார்க் அறிவித்துள்ளது.
அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 40 ஆயிரம் பேரில் ஒருவருக்கு மோசமான பக்க விளைவுகள் ஏற்படுவதாக சர்ச்சை எழுந்து உள்ள நிலையில் இந்த முடிவை எடுத்து உள்ளதாக டென்மார்க் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களுக்கு ரத்த உறைதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், தடுப்பூசி குறித்து அந்தந்த நாடுகளே முடிவெடுத்துக் கொள்ளலாம் என ஐரோப்பிய ஒன்றிய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments