ஜெப் பெசோஸ்சின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் என்.எஸ் -15 ரக ராக்கெட் சோதனை வெற்றி
அமேசான் நிறுவனர்ஜெப் பெசோஸ்சின் (Jeff Bezos) ப்ளு ஆர்ஜின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் நியூ செப்பர்ட்-15 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
விண்வெளியில் பிரிந்த ராக்கெட்டின் பூஸ்டர் மீண்டும் ஏவுதளத்தில் தரையிறங்கியது. விண்வெளி வீரர்கள் வரும் கேப்சூல் மேற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள பாலைவனத்தில் பாரசூட் உதவியுடன் தரையிறக்கப்பட்டது.
எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ், யுனைடட் லாஞ்ச் அலைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு போட்டியாக நாசாவின் பல பில்லியன் டாலர் திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணிக்காக ராக்கெட் தயாரிக்கும் பணியில் ஜெப் பேசாஸ்சின் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் இறங்கி உள்ளது.
இதற்கு முன் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் அனுப்பிய 14 ராக்கெட்டுகளும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments