சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க அம்பேத்கர் விரும்பினார்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பேச்சு
சமஸ்கிருதத்தை அதிகாரப்பூர்வ தேசிய மொழியாக்க சட்டமேதை அம்பேத்கர் விரும்பியதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர், அம்பேத்கரின் பிறந்தநாளின் போது, மொழிகளுக்கு இடையே சண்டை இருப்பதாகக் குறிப்பிட்டார். இதனால்தான் அம்பேத்கார், சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக்க விரும்பியதாக போப்டே தெரிவித்தார்.
வட இந்தியாவில் தமிழும், தென்னிந்தியாவில் இந்தியும் ஏற்றுக்கொள்ளப்படாத போது இரு மொழிகளுக்கும் பொதுவாக சமஸ்கிருதத்தை அம்பேத்கார் முன்வைத்ததாகவும், ஆனால் அந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை என்றும் தலைமை நீதிபதி போப்டே தெரிவித்தார்.
Comments