"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ரெம்டெசிவர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு முடிவு
ரெம்டெசிவர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த மருந்தின் விலை குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அரசு விடுத்துள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பு மருந்தான ரெம்டெசிவிர் கிடைப்பதில் உள்ள பிரச்சனை குறித்து மத்திய ரசாயனத்துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா, அதன் தயாரிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
இதில் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்கவும், விலையை குறைக்கவும் முடிவுகள் எடுக்கப்பட்டன. தற்போது மாதத்திற்கு 39 லட்சம் குப்பிகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில் கூடுதலாக 10 லட்சம் குப்பிகள் உற்பத்தி செய்ய கூடுதலாக 6 நிறுவனங்களுக்கு அனுமதியளித்துள்ளதாக மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments