மகாராஷ்டிரத்தில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு: அத்தியாவசியப் பணியாளர்கள் மட்டுமே நடமாட அனுமதி

0 4312
மகாராஷ்டிரத்தில் அமலுக்கு வந்தது 144 தடை உத்தரவு

மகாராஷ்ட்ராவில் நேற்று இரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. திரையரங்குகளில் நேற்றிரவு காட்சிகள் ரத்து செய்யப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன.

போலீசார் வாகனங்களைத் தடுத்து நிறுத்தினர். பல்வேறு இடங்களில் வாகனங்களைத் தடுத்து நிறுத்த தடுப்புகளை அமைத்த போலீசார் அநாவசியமாக நடமாடியவர்களை விரட்டி அடித்தனர். பலருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

மெரின் டிரைவ் கடற்கரையோரம் நடைப்பயிற்சியில் இருந்தவர்களும் வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
அத்தியாவசியப் பணியாளர்களுக்காக மின்சார ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து நீடிக்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் பேருந்துகளில் ஏற முண்டியடித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments