ரெம்டெசிவிர் மருந்துக்கு செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படச் செய்து கள்ளச் சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை -அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எச்சரிக்கை
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் ரெம்டெசிவிர் மருந்தை, செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படச் செய்து கள்ளச் சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் எச்சரித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறினார்.
ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு, கொரோனா பாதிப்பு குறைந்திருந்த போது அதன் தயாரிப்பு குறைக்கப்பட்டதே காரணம் என்று அவர் குறிப்பிட்டார் ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பை அதிகப்படுத்தும்படி, சம்பந்தப்பட்ட நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.
Comments