பேருந்தை ஓட்டிச்சென்ற போது 24 வயது ஓட்டுனருக்கு மாரடைப்பு: சாகும் தருவாயிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகள் உயிரை காப்பாற்றிய ஓட்டுனர்..!

0 9088
தனியார் பேருந்தை ஓட்டிச்சென்ற போது 24 வயது ஓட்டுனர் மாரடைப்பால் மரணம்: சாகும் தருவாயிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகள் உயிரை காப்பாற்றிய ஓட்டுனர்..!

திருச்சி அருகே நெஞ்சு வலி ஏற்பட்டு மரணிக்கும் தருவாயில் கூட சாமர்த்தியமாக செயல்பட்டு 30க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு தனியார் பேருந்து ஓட்டுனர் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பூனைக்குத்தி பட்டியை சேர்ந்த 24 வயது இளைஞரான ஆனந்த், திருச்சியில் இருந்து அன்னவாசல் நோக்கி பேருந்தை ஓட்டிச்சென்றுள்ளார். திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரங்குடி பிரிவு ரோடு அருகே சென்றபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதில் நிலை தடுமாறினாலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சாலை தடுப்புக்கட்டையில் ஏறி ரோட்டை கடந்து அருகே இருந்த முட்புதர் பகுதியில் பேருந்தை நிறுத்தி பயணிகளின் உயிரை அவர் காப்பாற்றினார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments