என் பரம்பரையிலேயே நான் தான் கார் வாங்கியிருக்கேன்... கண்ணீர் விட்ட ஜி.பி முத்து!

0 245021

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜி.பி. முத்து  யாருனு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும் என்று சொல்லும் அளவிற்கு டிக் - டாக் மூலம் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆகினார்.

தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள முத்துவிற்கு 4 குழந்தைகள் உள்ளனர் . பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவைகளை வாங்கி அதனை பழுது நீக்கி விற்பனை செய்யும், மரக்கடை ஒன்றை நடத்தி வந்தார்.

தொடக்கத்தில் பொழுது போக்கிற்காக டிக் -டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்த ஜி.பி முத்து, ஒரு கட்டத்தில் டிக் டாக்கே கதி என்று கிடந்தார். இதனால் தான் பார்த்து வந்த தொழிலும் கைநழுவி போனது. அதே நேரத்தில் டிக் - டாக்கில் வெற்றி கொடி நாட்டி வந்த ஜி.பி முத்துவிற்கு டிக் டாக் தடை என்ற செய்தியும் பேரிடியாய் விழுந்தது.

ஆனால் தளர்ந்து விடாமல், ரவுடி பேபி சூர்யாவுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் களம் இறங்கினார் .

அதனை தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சி காமெடி ஷோக்களில் தோன்றி , தனது ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். இதன் மூலம் ஜி.பி முத்துவின் கிராஃப் உயரத்தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஜிபி. முத்து second handed car ஒன்றை வாங்கியுள்ளார். தற்போது இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள ஜிபி.முத்து , தனது பரம்பரையிலேயே கார் வாங்கிய முதல் நபர் தான் தான் என்று ஆனந்த கண்ணீருடன் தெரிவித்துள்ளார். ஜி.பி முத்துவின் புதிய கார் குறித்த செய்தி இணையத்தை கலக்கி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments