படம்பார்க்க விடாததால் ஆத்திரம்..! கர்ணன் திரைப்படம் ஓடும் திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம ஆசாமிகள்

0 7914
படம்பார்க்க விடாததால் ஆத்திரம்..! கர்ணன் திரைப்படம் ஓடும் திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம ஆசாமிகள்

தூத்துக்குடியில் கர்ணன் படம் ஓடும் திரையரங்கத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் எனக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள திரையரங்கில் நேற்றிரவு படம்பார்க்க வந்த 5பேர் மது அருந்தியிருந்ததால் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்து, டிக்கெட்டுக்கான பணத்தை கொடுத்துத் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

படம்பார்க்க அனுமதிக்காததால் நள்ளிரவில் மீண்டும் திரும்பி வந்த அவர்கள் தியேட்டர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. பெட்ரோல் குண்டுகள் தரையில் விழுந்து வெடித்ததததால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

காவல் துறையினர் கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பெட்ரோல் குண்டு வீசியவர்களைத் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments