தமிழகத்தில் பத்து மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு

0 5039
தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடி, மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு, உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் இடி, மின்னல், காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

15, 16 ஆகிய தேதிகளில் சில மாவட்டங்களில் கனமழையும், சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் நகரின் சில பகுதிகளில் இரு நாட்களுக்கு இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 11 செண்டி மீட்டர் மழையும், சேலம் மாவட்டம் எடப்பாடியில் 8 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments