மனைவிக்கு வாரிசு வேலை கிடைக்க, மைத்துனரை கொலை செய்த தங்கையின் கணவர்!

0 6628

மனைவிக்கு வாரிசு பணி கிடைக்க, மைத்துனரை கொலை செய்தவரை,  போலீசார் கைது செய்தனர்.


வேலுார், கஸ்பா பயர்லைனைச் சேர்ந்தவர் லட்சுமி. இவருக்கு ராஜா என்ற மகனும் உஷா என்ற மகளும் உள்ளனர். உஷாவிற்கு ஆட்டோ ஓட்டுநரான குமார் என்பவருடன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.

வேலுார் மாநகராட்சியில், துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்த லட்சுமி, உடல் நலக்குறைவால் கடந்தாண்டு உயிரிழந்தார் . இதனால், 10 லட்சம் ரூபாயும், வாரிசு அடிப்படையில் ஒருவருக்கு பணியும் வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர் . புது ஆட்டோ வாங்க, பணம் வேண்டும் என்றும், கருணை அடிப்படையில், தனது மாமியாரின் வேலையை தன் மனைவி உஷாவுக்கு வழங்க வேண்டும் என்றும் குமார் கூறினார்.

இதில், லட்சுமியின் மகன் ராஜாவுக்கும், குமாருக்கும் தகராறு ஏற்பட்டது. ஒரு மாதத்தில் முடிவு தெரிவிக்க வேண்டும் என, மாநகராட்சி தரப்பில் கூறினர். இதனால், மைத்துனர் ராஜாவை கொலை செய்ய குமார் திட்டமிட்டார். கடந்த, 7ம் தேதி இரவு, 10:00 மணிக்கு ராஜாவை சித்தேரிக்கு அழைத்து சென்ற குமார், அவரை அளவுக்கு அதிகமாக, மது குடிக்க வைத்ததாக கூறப்பப்டுகிறது. பின்னர் ராஜாவின் கழுத்தை நெரித்து கொன்று, கை, கால்களை கட்டி, கிணற்றில் வீசி சென்றுள்ளதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து விசாரணையின் அடிப்படையில்,  காவல்துறையினர், மைத்துனர் ராஜாவை கைது செய்தனர். 

அரசு வேலைக்காகவும், பணத்திற்காகவும் மச்சானை தங்கையின் கணவரே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments