சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று வந்தால் தீவிரமாக இருக்கும்-ஆய்வில் தகவல்

0 7021
உடல் செயல்பாடுகள் இல்லாமல் சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்கு கொரோனா வந்தால்,அது தீவிரமாக இருப்பதுடன் இறப்புவரை செல்லக்கூடும் என ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது.

உடல் செயல்பாடுகள் இல்லாமல் சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்கு கொரோனா வந்தால்,அது தீவிரமாக இருப்பதுடன் இறப்புவரை செல்லக்கூடும் என ஆய்வுத் தகவல் வெளியாகி உள்ளது.

50 ஆயிரம் கொரோனா நோயாளிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் என்ற இதழ் வெளியிட்டுள்ளது.

தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு வரை, உடலுக்கு எந்த பயிற்சியும் அளிக்காதவர்கள் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் அளவுக்கு பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வயோதிகம் அல்லது உறுப்புமாற்று சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு அடுத்தபடியாக உடற்பயிற்சி மற்றும் உடல் இயக்கம் இல்லாதவர்களையே கொரோனா உயிரிழப்பு வரை அழைத்துச் செல்லும் ஆபத்து உள்ளதாவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments