சென்னையில் இரண்டு மண்டலங்களில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை கடந்தது

0 6405

சென்னை மாநகராட்சியில் 2 மண்டலங்களில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோரும், 7 மண்டலங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி சென்னையில் 18 ஆயிரத்து 673 பேர் தற்போதைய கொரோனா நோயாளிகளாக உள்ளனர். அதிக அளவாகத் தேனாம்பேட்டை மண்டலத்தில் இரண்டாயிரத்து 109 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் இரண்டாயிரத்து 37 பேரும் தற்போதைய கொரோனா நோயாளிகளாக உள்ளனர்.

தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு ஆகிய 7 மண்டலங்களிலும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா நோயாளிகளாக உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments